Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM
வடலூர் அருகே மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நிவாண பொருட்கள் வழங் கப்பட்டன.
வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் ‘நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட கொளக் குடி, ஓணான்குப்பம் கிராம மக்களுக்கு, வடலூர் சுத்த சன்மார்க்கநிலைய தலைவர் சங்கர், வாணவராயர் புரவலர் பாலசுப்ரமணியம், டாக்டர் பிரேமா ஆகியோரால் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. கோவை குமர குரு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ரமேஷ், ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ரா.செல்வராஜ் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.இதில் ஓணான்குப்பத்தை சேர்ந்த 164 பேருக்கும், கொளக்குடியை சேர்ந்த 38 பேருக்கும், சுத்த சன் மார்க்க நிலைய ஊழியர்கள் 35 பேருக்கும் வெள்ள நிவாரண பொருட்களாக அரிசி, போர்வை, பால் பவுடர், பாய், பிஸ்கெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன. இவர்கள் அனை வரும் கல்லூரி பேருந்துகள் மூலம்அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வடலூர் காவல்நிலைய இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) கவிதா, ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT