Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல் நேர்முக உதவியாளர் காவல்நிலையத்தில் புகார்

சந்திரசேகர் சாகமூரி

கடலூர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில்போலி மின் அஞ்சல் தொடங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க, ஆட்சியர் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சந்திரசேகர் சாகமூரி. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ‘chandar sekhar sakhamuri IAS’என்ற பெயரில் முகநூல் கணக்குதொடங்கப்பட்டு, ‘executivecdirector 50@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரியில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மின்னஞ்சல் முகவரி மாவட்டஆட்சியர் பெயரில் இருப்பதால். மாவட்டத்தில் உள்ள உயரதிகாரி கள், பொதுமக்கள், பல்வேறு சமூகநல அமைப்பினர், பல்வேறு சங்கங் களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதனைப் பார்வையிட்டு தங்களின் கருத்துக்கள், கோரிக்கைகளை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி சார்பில் மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், ‘இந்த மின்னஞ்சல் போலியானது’ என்று, புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “மின் அஞ்சலின் முகவரியில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல், நிர்வாகத்துக்கு தொடர் பில்லாத இணைய தள செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த மின்அஞ்சல் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டு, இம்மாதிரியான குற்ற நடவடிக் கைகளில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள் ளார்.

கடலூர் புதுநகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இந்த நிலையில், ‘collrcud@nic.in’, ‘cudcollector@gmail.com’ஆகிய மின்னஞ்சல்கள் மட்டுமே,தனது தரப்பில் இருந்து அதிகார பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x