Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
எட்டு மாதங்களுக்குப் பின் திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் நகரில் தொல்லியல் கட்டுப்பாட்டின் கீழ் சுற்றுலாத் தலமாக உள்ள மலைக்கோட்டைக்குச் செல்ல கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக எட்டு மாதங்களுக்குப் பின் திண்டுக்கல் மலைக்கோட்டை திறக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள், திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் உட்பட பலரும் ஆர்வமுடன் மலைக்கோட்டைக்குச் சென்றனர்.
முன்னதாக, பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற நிலைமாறி கியூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து, கூகுள் பே, பேடிஎம் மூலம் மட்டுமே நுழைவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதனால், மலைக்கோட்டைக்குச் செல்ல வந்த பலரும், தங்கள் மொபைல் போனில் பணம் செலுத்தும் வசதி இல்லாததால் டிக்கெட் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். பாதுகாப்புக் கருதி முதியோர், சிறுவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மலைக்கோட்டை செல்ல அனுமதி கிடையாது. காலை 8 முதல் 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
ஆன்லைன் பணப் பரிவர்த் தனையால் ரூ.25 ஆக இருந்த கட்டணம் ரூ.20 ஆகவும், வெளி நாட்டவருக்கு ரூ.300 ஆக இருந்த கட்டணம் ரூ.250 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மலைக்கோட்டைக்குச் செல்வோர் வெப்பநிலையைச் சோதித்து, சானிடைசர் பயன் படுத்தி, முகக்கவசம் அணிந்த பின்னரே அனுமதிக்கப்படுகின் றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT