Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM

முட்புதரிலிருந்து பெண் சிசு மீட்பு

திருவாரூர்

திருவாரூர் நகர பகுதிக்கு உட்பட்ட கொத்தத் தெரு காளியம்மன் கோயில் அருகே உள்ள முட்புதரில் இருந்து நேற்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதைக் கேட்ட அப்பகுதி மக்கள் முட்புதருக்குள் சென்று பார்த்தபோது, அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடப்பது தெரியவந்தது.

குழந்தையை மீட்ட பொதுமக் கள் அளித்த தகவலின் பேரில், திருவாரூர் நகர போலீஸார் அங்கு வந்து குழந்தையை வாங்கி, குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ள அந்த குழந்தையை நேற்று மதியம் பார்த்த திருவாரூர் ஆட்சியர் வே.சாந்தா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக அரசு இதுபோன்ற குழந்தைகளை பாதுகாப்ப தற்காகவே தொட்டில் குழந்தை திட்டத்தை செயல்படுத்துகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உள்ள தொட்டில் களில் குழந்தையை விட்டுச் செல்லலாம். இதை தவிர்த்து, பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை போட்டுச் செல்வது சமூக குற்றம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x