Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM
விழுப்புரத்தில் 3-ம் எண் லாட்டரி டிக்கெட் வாங்கி, அதில் ஏற்பட்ட மோசடியால் கடன் சுமைக்கு ஆளாகி, 3 குழந்தைகளுடன் கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தாருக்கு நேற்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் அருண் (33). நகை தொழிலாளியான இவரதுமனைவி சிவகாமி (27). இத்தம் பதிக்கு முறையே 6 வயது மகள் தர்ஷினி, 3 வயது மகள் யுவ, 3 மாத குழந்தை பாரதி என 3 மகள்கள் இருந்தனர்.
அருண் விழுப்புரத்தில் அதி கமாக புழக்கத்தில் இருக்கும், தடை செய்யப்பட்ட 3-ம் நம்பர் லாட்டரியை வாங்கி, கடனாளி ஆனார். இதில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்த அவர், கடந் தாண்டு டிசம்பர் 12-ம் தேதி இரவு தனது மனைவி, மகள்களுக்கு சய னைடு கொடுத்து, தானும் உண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன், அருண் தன் மனைவி சிவகாமியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோவில், “விழுப்புரத்தில் 3-ம் நம்பர் லாட்டரி டிக்கெட்டை ஒழித்து விடுங்கள். என்னைப் போல 10 பேர் பிழைத்துக் கொள்வார்கள். இதோ, என் 3 குழந்தைகளும் இறந்து விட்டன. இப்போது நானும் என் மனைவியும் சயனட் சாப்பிட்டு சாகப்போகிறோம்” என்று உருக்கமுடன் பதிவிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, மோசடி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30 பேர் குண்டர் சட்டத்தில கைதாயினர்.
இந்நிலையில் நேற்று கைவினை ஞர் முன்னேற்றக் கட்சியின் மாநில அமைப்பாளர் சி.உமாபதி தலைமையில் விழுப்புரத்தில் அக்குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் த. பாலு, மக்கள் பாது காப்பு கழக தலைவர் பி. வி. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கேற்றோர், மோசடி லாட்டரி டிக்கெட்டை ஒழிக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அப்போது பேசிய அவர்கள், “அருண் இறப்புக்குப் பின் அவரது வீட்டை ரூ. 22 லட்சத்திற்கு விற்று கடனை அடைத்துள்ளோம். இந்த மோசமான லாட்டரி, சமூகத்தை பாழ்படுத்தி வருகிறது. இன்னமும் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மோசடி லாட்டரி புழங்குகிறது” என்று தெரிவித்தனர்.
“லாட்டரிக்கு என தனிச் சட்டப்பிரிவு ஏதுமில்லை. கேம் லிங்கில் இதுவும் தொடர்புடையது. இதற்கான சட்டப்பிரிவு மிகவும் பலவீனமானது. இதில் கைப்பற்றப் படும் ரொக்கப் பணத்தை கொண்டேவழக்குப்பதிவு செய்ய முடியும். இதில், சட்டத் திருத்தம் செய்தாலே கடுமையான நடவடிக்கையை எங்களால் எடுக்க முடியும்” என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT