Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM
குருபரப்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாராயணன் (50). இவரது மனைவி நாகலட்சுமி (45). இவர்களது மகன் பிரதீப் (25). இவர் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். நாராயணன், செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ராமாபுரத்தில் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் வங்கி எதிரே உள்ள வீட்டில் நாகலட்சுமி, பிரதீப் ஆகியோர் வசித்து வருகின்றனர். நாகலட்சுமி தனது வீட்டு மாடியில் உள்ள 2 வீடுகளில் ஒன்றை வாடகைக்கு விட்டுள்ளார். மற்றொரு வீடு காலியாக இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை நாகலட்சுமி காலியாக உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த எஸ்பி பண்டி கங்காதர் மற்றும் குருபரப்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தினர். சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT