Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM
அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம் சுற்றுப்புற கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியு றுத்தினர்.
அரியலூரை அடுத்த கயர்லா பாத் கிராமத்தில் இயங்கிவரும் அரசு சிமென்ட் ஆலைக்கு கல்லங்குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வது குறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் 2-வது நாளாக நேற்று கயர்லாபாத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். மாவட்ட மாசுக் கட்டுப்பாடுத் துறை செயற்பொறியாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
இதில், விவசாயிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளையும், கோரிக்கைக ளையும் தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர்கள் தங்க.சண் முக சுந்தரம், அருண்மொழிவர்மன், கோடி கணேசன், செட்டி திருக் கோணம் இளவரசன் ஆகியோர் பேசும்போது, “சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் கனிமங்கள் தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டால், அரியலூர் மாவட்டத்தில் விரைவில் நிலநடுக்கம், நிலச்சரிவு ஏற்படும். காலாவதியான சுரங்கங்களை மூடி, கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும், குறுங்காடுகளாகவும், மூட முடியாத பகுதிகளை நீர்த்தேக் கங்களாகவும், மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரையிலான மாசு அளவை வெளியிட வேண்டும். ஆலை நிர்வாகம் சுற்றுப்புற கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” என்றனர்.
வாலாஜா நகரம் ஒன்றியக்குழு உறுப்பினர் ராணி: ஆலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கல்வி, மருத்துவம், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்தி தரவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
கல்லங்குறிச்சி ஊராட்சி தலை வர் ஆர்த்தி: சுண்ணாம்புக்கல் சுரங்கம் தொடர்ந்து தோண்டப் படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், மக்கள் குடிநீர் மற்றும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
தொடர்ந்து, கல்லங்குறிச்சி, உசேனாபாத், பெரியநாகலூர், வாலா ஜாநகரம் உள்ளிட்ட கிராமங் களைச் சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகள், கோரிக்கைகளை தெரிவித்தனர். பின்னர், கோரிக் கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித்தார்.
கூட்டத்தில், கோட்டாட்சியர் ஜோதி, வட்டாட்சியர் சந்திரசேகர், ஆலை துணைப் பொது மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT