Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM

விழுப்புரத்தில் ஊடகங்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கு திறப்பு

விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்டவளாகத்தில் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் மற்றும் வாக்காளர்கள் சமர்ப்பிக்கும் வாக்கு தணிக்கை சோதனை இயந்திரங்களை முறையாக சேமிக்கும், சேமிப்பு கிடங்குஅமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டி டத்தை நேற்று அதிகாலை ஆட் சியர் அண்ணாதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

எஸ்பி. ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜலட்சுமி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் பத்ரி, வட்டாட்சியர்கள் சீனிவாசன், வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

யாருக்கும் தெரிவிக்காமல் அதிகாலையில் இக்கட்டிடத்தை திறக்கவேண்டிய அவசியம் என்ன என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, "கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. அதனால் ஊடகங்களுக்கு கூட தெரிவிக்க இயலவில்லை" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x