Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM
காங்கிரஸ் கட்சியின் தீவிர பற்றாளரும், தொழில் அதிபரும், கிருஷ்ணகிரி கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியனின் பெற்றோர் லோகநாதன் - முனியம்மாள் ஆகியோரின் திருவுருவ வெண்கல சிலை மற்றும் மணி மண்டபம் காவேரிப்பட்டணம் அருகில் உள்ள மிட்டள்ளி பண்ணை வீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளருமான விஷ்ணு பிரசாத் எம்பி சிலையைத் திறந்து வைத்து மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் கோபிநாத், மனோகரன், கோவிந்தசாமி, திமுக எம்எல்ஏ செங்குட்டுவன், திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமரேசன், ரகு, ஆஜித்பாஷா, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் அகரம் கிருஷ்ணமூர்த்தி, ஜேசுதுரை, முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா, மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன், அப்சல், மாவட்ட செயலாளர் கோவிந்தன், வட்டாரத் தலைவர் ராமன், நகர தலைவர் தவமணி, மாவட்ட அணிகள் தலைவர் ராமசந்திரன், டேம் வெங்கடேசன், நாகராஜ், தேங்காய் சுப்பிரமணி, சாந்தமூர்த்தி, பாபு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT