Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 10 கி.மீ தொலைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நடைபயண பேரணி நடத்தினர். திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமையில், மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 பேர் பங்கேற்றனர். இதில், 30 டிராக்டர்களிலும் ஊர்வலமாகச் சென்றனர்.
பேரணி தொடங்கி ஓரிரு கி.மீ தொலைவில் உள்ள கீழமணலியில் போலீஸார் பேரணியை தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனாலும், போலீஸாரின் எதிர்ப்பையும் மீறி திருத்துறைப் பூண்டி தபால் நிலையம் வரை சென்று, பேரணி நிறைவடைந்தது. பின்னர், அங்கு வேளாண் சட்டங் களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT