Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘ராபி’ பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு குறு வட்டார அளவில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை, புயல், வறட்சி போன்ற இடர் பாடுகளின்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் தோட்டக் கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020-21 ஆம் ஆண்டு ‘ராபி’ பருவத்துக்கு செயல்படுத்தப் படுகிறது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் அக்ராபாளையம், கேளூர், சந்தவாசல், கண்ணமங் கலம் குறு வட்டங்களில் வாழை பயிர், செங்கம், கடலாடி, கேட்ட வரம்பாளையம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, வாணாபுரம், தச்சம்பட்டு ஆகிய குறு வட்டாரங்களில் மரவள்ளி பயிர், கீழ்பென்னாத்தூர், மங்கலம், துரிஞ்சாபுரம் ஆகிய குறு வட்டாரங்களில் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்யப்பட உள்ளது.
வாழை பயிருக்கு ரூ.2,680
பொது சேவை மையத்தை அணுகலாம்
பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்ட குறு வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், கணினி சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையம் ஆகியவற்றை அணுகி காப்பீடு செய்யலாம்.இதுதொடர்பான விவரங் களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT