Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM

சிவகங்கையில் 2 நாட்களில் சேதமடைந்தபுதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலை

கரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி டிச.4-ம் தேதி சிவகங்கை வந்தார். அதையொட்டி சிவகங்கை நகரிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டன. இவை 2 நாட்களில் சேதமடைந்து ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். தரமின்றி சாலை அமைத்தவர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x