Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் எஸ்டிபிஐ மற்றும் தமுமுக கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை ஆத்துப்பாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹலான் பாகவி, தபெதிக பொதுச்செயலர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாபர் மசூதி நிலஉரிமை விவகாரத்தில், வழிபாட்டு தலங்கள் சட்டத்தை அமல்படுத்தி,மசூதி இருந்த இடத்தை மீண்டும்இஸ்லாமியர்களிடம் திரும்பஅளிக்க வேண்டும். மசூதியை இடித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ மாவட்டதலைவர் ஜே.பஷீர் அஹமது தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலத் துணைத் தலைவர் ஏ.காலித் முஹம்மது, திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் மு.முகில்ராசு, அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் ஹாஜிஎஸ்.எஸ்.இப்ராஹிம் கலில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உதகை ஏடிசி சுதந்திர திடலில் தமுமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் அப்துல் சமது, செயல் தலைவர் ஏ.ஹெச்.ஆர்.அக்பர்அலி, செயலர் எம்.அஸ்கர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் பி.ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT