Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு

தஞ்சாவூர்/ புதுக்கோட்டை

தஞ்சாவூர் தெற்கு, வடக்கு, மத்திய மாவட்ட திமுக சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு தலைமை வகித்தார். திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சு.கல்யாணசுந்தரம், மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி ப.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.பி எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், கோவி செழியன், டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், கைவினைத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு சங்கங்கள், பொதுநல அமைப்பு களைச் சேர்ந்தவர்கள், தங்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறியதுடன், மனுக்களை வழங்கினர்.

தொடர்ந்து, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.

இதில் எம்.பி டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் பங்கேற்று கட்சியினர், விவ சாயிகள், சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்தோர், பொதுமக்களிடமிருந்து மனுக் களை பெற்றனர்.

நிகழ்ச்சியில், திமுக எம்எல் ஏக்கள் எஸ்.ரகுபதி, பெரியண்ணன் அரசு, சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x