Published : 07 Dec 2020 03:16 AM
Last Updated : 07 Dec 2020 03:16 AM
தி.மலை மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகிவிட்டது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் ரவுடி களின் நடவடிக்கைகள் அதிகரித் துள்ளதால் மக்கள் அச்சமடைந் துள்ளனர். வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பது, பொருட்களுக்கு பணம் தர மறுப்பது, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிக்கூட்டம், பட்டப்பகலில் சர்வ சாதார ணமாக கொலை செய்யும் நிலைக்கு முன்னேற்றமடைந்துள்ளனர். இதில், கூலிப்படையினர் பங்கேற் றுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “தி.மலையில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் வட்டித் தொழிலில் ஈடு பட்டு வந்த ஒருவர், மக்கள் நடமாட்டம் மிகுந்த காந்தி நகரில் கடந்த வாரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் அரங்கேறிய கொலையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக நிர்வாகி கொலைக்கு பழி தீர்க்க, இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்காக தனிப்படைகள் அமைத் திருந்தாலும், கொலையாளிகள் சிக்கவில்லை.
செய்யாறில் பட்டாசு கடை உரிமையாளரை கடந்த வாரம் ரவுடி ஒருவர் கத்தியால் வெட்டியது வர்த்தகர்களை அச்சமடைய செய்துள்ளது. தான் வாங்கிய பட்டாசுகளுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த ரவுடி, கடையின் உரிமையாளரை கத்தியால் வெட்டி விட்டு, தான் ஓட்டி வந்த ஆட்டோ வில் சென்றுள்ளார். அவரது செயலை கண்டு, சக வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பயத்தில் உறைந்து போய் உள்ளனர். கத்தியுடன் வலம் வந்து வர்த்தகரை வெட்டிய சம்பவம், சினிமா படக் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இருந்துள்ளது.
ஆரணியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மாதம் காஸ் சிலிண்டர் வெடித்ததால் இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும், 5 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தரப்பில் கூறப்பட் டது. அதே நேரத்தில், காஸ் சிலிண் டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா? என ஆரணி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தரைமட்டமான வீடு களில் இருந்து காஸ் சிலிண்டர்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன. சிலிண்டர் வெடிக்கவில்லை என சம்பந்தப்பட்ட காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளி யானது. இதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு காவல் துறையினர் தெரிவிக்க வேண்டும் என ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் வலியுறுத்தி இருந்தார். இதற்கு, காவல்துறை தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படவில்லை.
ரவுடிகளின் பணத் தேவைக்குவர்த்தகர்கள் இலக்காக்கப்படு கின்றனர். இதில் சிறு வணிகர் களும் மற்றும் சாலையோர வியா பாரிகளும் அடங்குவர். ரவுடிகள் மிரட்டலுக்கு பயந்து பணம் அல்லது கடையில் உள்ள பொருட் களை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ரவுடிகளை பகைத்துக் கொண்டு காவல்துறையிடம் புகார் கொடுக் கவும் அச்சப்படுகின்றனர். ரவுடி களை அரசியல்வாதிகள் ஆதரிப் பது போல், காவல் நிலையங்களி லும் சில கருப்பு ஆடுகள் உள்ளதே அந்த அச்சத்துக்கு காரணமாகும். மேல் மட்டத்தில் உள்ள சிலர் ‘நேச கரம்’ நீட்டுவதால், காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு நேர்மையாக உள்ளவர்களால் தகவலை கொண்டு செல்ல முடியவில்லை.
மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் நெருக்கான பிரிவும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ரவுடிகளின் நடமாட்டத்தை கண் காணித்து தகவல் தெரிவிப்பதற் காக உள்ள சிறப்பு பிரிவின் செயல்பாடுகளும் திருப்தியாக இல்லை என கூறப்படுகிறது. ரவுடி களின் நடவடிக்கைகளால் மாவட் டத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளது. ரவுடிகளின் விவகாரத்தில் எவ்வித சமரசத்துக் கும் இடம் கொடுக்காமல், இரும்புகரம் கொண்டு ஒடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவ டிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதி காரி ஒருவர் கூறும்போது, “ரவுடி கள் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பது தவறு. நடவ டிக்கை எடுத்து வருகிறோம். அவர் களை கண்காணித்து, அவர்களது திட்டங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதில், தாமதம் ஏற்படுகிறது. ரவுடிகள் பட்டியலில் உள்ள 16 பேரை கடந்த 2 நாட் களுக்கு முன்பு கைது செய்து சிறை யில் அடைத்துள்ளோம். மேலும், கோட்டாட்சியர் முன்னிலையில் 20 பேர் ஆஜர்படுத்தப்பட்டு நன்ன டத்தை பிணையம் வழங்கப்பட்டுள் ளது. ரவுடிகள் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT