Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் கொட்டும் மழையில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப் போக்கில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன், மைதிலி ராஜேந்திரன், தலைமை தீர்மான குழு செயலாளர் ஏஜி சம்பத், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான எம்எல்ஏ மஸ்தான் தலைமையேற்றார். இந்த ஆர்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சீதாபதி, முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன், செஞ்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செஞ்சியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எம்எல ஏ மஸ்தான் உள்ளிட்ட 85 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x