Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM
காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் நேற்று நீரில் மூழ்கி உயிர்இழந்தனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள தும்பவனம் பகுதியைச் சேர்ந்தஆறுமுகம் மகள் பூரணி(15), சம்பத் மகள் ஜெய(15), இவரது தங்கை சுப(13) இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் பாலாறுக்குச் சென்றனர். ஆற்றில் தண்ணீர்செல்லவே அதில் மூவரும் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நீரில் மூழ்கி மாயமாகினர்.
இதுகுறித்து இந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சிறுமிகளை தீவிரமாக தேடியும் அவர்களைமீட்க முடியவல்லை.
இந்நிலையில் நேற்று காலை குருவிமலை பகுதியில் ஜெய, பூர்ணிமா ஆகியோரின் உடல்கள் கரை ஒதுங்கின. தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார்இவர்களின் உடல்களைமீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில மணி நேரம் கழித்து சுபயும் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர்கள் குளித்த பகுதியில் மணல் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளம் இருந்துள்ளது. சமமான தரை என்று நினைத்து குளித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பள்ளத்தில் சிக்கி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் அதிகதண்ணீர் செல்வதால் குழந்தைகளை ஆற்றுக்கு அருகே அனுப்ப வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT