Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல் செங்கல்பட்டு பொதுமக்கள் புகார்

செங்கல்பட்டு: செங்கை மாவட்டத்தில் சுமார் 7 லட்சம் காஸ் இணைப்பு வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளரின் வீடு களுக்கு சென்று காஸ் சிலிண்டரை விநியோகிக்கும் காஸ் நிறுவன ஊழியர்களில் சிலர் ரூ.50 முதல் 100 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதிக கட்டணம் கொடுக்க மறுத்தால் சிலிண்டர் விநியோகத்தை தாமதப்படுத்துகிறார்கள். எனவே இம்மாவட்டத்தில் இயங்கும் காஸ் ஏஜென்சிகள் மீது மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காஸ் ஏஜென்ஸியிடம் கேட்டபோது, ’வாடிக்கையாளர்கள் காஸ்சிலிண்டர் விநியோகத்தின்போது,டெலிவரி ஆட்கள் கொடுக்கும் ரசீதில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் கொடுத்தால் போதும். அதிக தொகைகேட்டால் 18002333555 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், www.iocl.com என்ற இணையதளம் மூலமும் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x