Published : 30 Nov 2020 03:12 AM
Last Updated : 30 Nov 2020 03:12 AM
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. தாழையூத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற முகாமில் 44 மனுக்களுக்கும், நாங்குநேரியில் துணை காவல் கண்காணிப்பாளர் லிசா ஸ்பிலா தெரஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 26 மனுக்களுக்கும், வள்ளியூரில் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தலைமையில் நடைபெற்ற முகாமில் 12 மனுக்களுக்கும், அம்பாசமுத்திரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்ஸிஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 5 மனுக் களுக்கும், சேரன்மகாதேவியில் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்ற முகாமில் 44 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மொத்தமாக 131 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT