Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

பயிர்க் காப்பீடு செய்வதற்கான தேதி நீட்டிப்பு தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு டிச.15, நாகை மாவட்டத்துக்கு நவ.30

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயி கள் டிச.15 வரை பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தலாம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப் பட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவல ரும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநருமான என்.சுப்பையன் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘நிவர்' புயல், மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 122 நிவாரண முகாம்களில் 1,606 குடும்பங்களைச் சேர்ந்த 1,761 ஆண்கள், 2,261 பெண்கள், 1,344 குழந்தைகள் என மொத்தம் 5,321 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். புயல் அபாயம் நீங்கி மழை நின்றதால், தற்போது அவர்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

மாவட்டத்தில் மனித உயிரிழப் புகள் ஏதுமில்லை. கால்நடை களில் 1 மாடு, 2 ஆடுகள் மழையினால் இறந்துள்ளன. சாலைகள், போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. 20 மின் கம்பங்கள் சேதமடைந்து, அவை சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஓட்டு வீடு, 35 கூரை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தொடர்பாக 49 புகார்கள் வரப்பெற்றன. அதில் 48 புகார்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. விவசாயிகள் சம்பா, தாளடி பயிர்களை காப்பீடு செய்வதற்கான பிரீமியத் தொகையை டிச.15-ம் தேதி வரை செலுத்தலாம். மழை, புயல் சேதம் இல்லை என்று அலட்சியம் காட்டாமல், விவசாயி கள் உடனடியாக அனைத்து பயிர்களுக்கும் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏரி, குளங்கள் 618-ல் 174 ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. மீதமுள்ளவற்றில் நீர் நிரம்பி வருகிறது.

டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்குமென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும். மழை, புயல் சேதம் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

பேட்டியின்போது, ஆட்சியர் ம.கோவிந்தராவ் உடனிருந்தார்.

நாகை மாவட்டத்தில்...

நாகை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்ய நவ.30-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நவ.25, 26 ஆகிய தேதிகளில் புயல் மற்றும் கனமழை எதிர்பார்க்கப்பட்டதால், விவசாயிகள் நவ.24-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என வேளாண் துறை மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால், பல விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில், புயல் மற்றும் கனமழை ஆபத்து நீங்கியதால், ‘‘பயிர்க் காப்பீடு செய்ய எவ்வித தடையும் இல்லை. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி விடுபட்ட விவசாயிகள் நவ.30-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்’’ என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x