Published : 27 Nov 2020 07:22 AM
Last Updated : 27 Nov 2020 07:22 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர்ச் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வேளாண் இணை இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையையொட்டி ஏற்பட்ட ‘நிவர்’ புயலால் கன மழை பெய்து வருகிறது.
நெற் பயிர் நடவு நிலையில் இருந்து அறுவடை நிலையிலும், மணிலா மற்றும் பயறு வகைகளைச் சேர்ந்த பயிர்கள் விதைப்பு முதல் 20 நாள் பயிராக உள்ளது. இந்நிலையில், தாழ்வானப் பகுதியில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் பாதிப்பு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
பயிர் பாதிப்பு குறித்த விவரங்களை, அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் மற்றும் வேளாண் அலுவலர்களை அணுகி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கலாம்.
திருவண்ணாமலை உதவி இயக்குநர் அன்பழகன் 94444-84046, துரிஞ்சாபுரம் உதவி இயக்குநர் செல்வராஜ் 89031-88761, கீழ்பென்னாத்தூர் உதவி இயக்குநர் சந்திரன் 90474-31671, தண்டராம்பட்டு உதவி இயக்குநர் ராம்பிரபு 94434-38310, போளூர் உதவி இயக்குநர் குணசேகரன் 95977-60120, செங்கம் உதவி இயக்குநர் பழனிவேல் 89032-72261, புதுப்பாளையம் உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் 99423-47569, கலசப்பாக்கம் வேளாண் அலுவலர் புஷ்பா 94446-81396, சேத்துப்பட்டு உதவி இயக்குநர் நாராயணமூர்த்தி 94434-23695, ஆரணி உதவி இயக்குநர் பவித்ராதேவி 97861-32390, மேற்கு ஆரணி உதவி இயக்குநர் திருமலைசாமி 95787-10856, வந்தவாசி வேளாண்மை அலுவலர் மதன்குமார் 81225-71156, தெள்ளாறு உதவி இயக்குநர் சிவபெருமாள் 90958-11225, பெரணமல்லூர் வேளாண் அலுவலர் கவிதா 84892-47185, செய்யாறு உதவி இயக்குநர் சண்முகம் 95667-46982, அனக்காவூர் வேளாண் அலுவலர் திருநாவுக்கரசு 96267-24898, வெம்பாக்கம் வேளாண் அலுவலர் சுமித்ரா 99657-38610 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT