Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM
சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் 5,162 பேர் புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.இந்த நிலையில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசித்து வந்த பொது மக்களை புயல் பாதுகாப்பு மையம்,பல்நோக்கு மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இதில், பரங்கிப்பேட்டை கடற் கரை பகுதிகளான எம்ஜிஆர் திட்டு, குச்சிப்பாளையம், மடவாப்பள்ளம், குமரப்பேட்டை, சாமியார்பேட்டை, திருவள்ளுவர் மற்றும் அகரம் புதுப்பேட்டை இருளர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
சிதம்பரம் பகுதியில் உள்ள கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங் கொண்டப்பட்டினம், திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். சிதம்பரம் பாமான் ஆற்றுக்கரைகளில் வசிக்கும் மக்கள் ரயிலடி அரசு பெண்கள் பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படைவசதிகளும் செய்து தரப்பட்டுள் ளன. முகாம்களை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். முகாம்களில் தங்க வைக்கப்பட் டிருப்பவர்களிடம் சரியான முறை யில் போதுமான அளவுக்கு உணவு வழங்கப்படுகிறதா, மருந்து, மாத் திரைகள் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தனர்.
சிதம்பரம் வருவாய் உட் கோட்டத்துக்கு உட்பட்ட சிதம் பரம், காட்டுமன்னார்கோவில், முஷ்ணம், புவனகிரி வட்டங் களில் 74 பாதுகாப்பு மையங்களில் 948 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 162 பேர் தங்க வைக் கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT