Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM
காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காஞ்சி ஆட்சியர் மகேஸ்வரி கூறியதாவது: மாவட்டத்தில் 19மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய்அலுவலர் நிலையில் 5 பேர் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 75 சதவீத அளவுக்கு நீர் வந்துள்ளது. முழு கொள்ளளவை எட்டியுள்ள ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் சூழப்படும் 126 தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களைவெளியேற்ற, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-27237107, 27237207, வாட்ஸ்அப் எண்: 9445071077, மேலும் காஞ்சிபுரம் 044-27222776, உத்திரமேரூர் 044-27272230, வாலாஜாபாத் 044-27256090, பெரும்புதூர் 044-27162231, குன்றத்தூர் 044-24780449, தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறை 044-27222899 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மாவட்டத்தின் அனைத்துதுறைகளை ஒருங்கிணைத்து 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 273 முகாம்கள் மற்றும்தற்காலிக முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் 24x7 முறையில் கட்டுப்பாட்டு அறை இயங்க வேண்டும் எனவும், அவ்வப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்வளத் துறை மூலம் புயல்தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை எண்களை (044-27427412. 044-27427414) மக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் பைபர் படகுகள், லைப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மழையால்பாதிக்கப்படக்கூடிய 133 பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளுக்காக பல்வேறு துறைகள்அடங்கிய, 64 மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க, வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் 2 புயல் பாதுகாப்பு மையங்களும், திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர்-1 மற்றும் எளாவூர் -2(மெதிப்பாளையம்) ஆகிய இடங்களில் 5 பன்னோக்கு பாதுகாப்பு மையங்களும், 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார்நிலையில் இருக்கின்றன.
பெருமழை தொடர்பாக, பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 044-27664177, 044-27666746 மற்றும்வாட்ஸ்அப் எண்களான 9444317862, 9384056215 ஆகியவற்றை தொடர்புகொண்டு, தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT