Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM
திருவாரூர்/ தஞ்சாவூர்/ மயிலாடுதுறை
புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 566 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நிவர் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மாநில உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று .ஆய்வு செய்தார்.
அப்போது, மன்னார்குடி நகருக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அபாயம் உள்ள சட்டிருட்டி வாய்க்காலில் மழைநீர் வேகமாக வழிந்தோடுவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, மன்னார்குடி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக் கப்படும் பொதுமக்களுக்கு உணவு சமைப்பதற்கான பொருட்களை ஆய்வு செய்தார். சோழபாண்டி, பெருகவாழ்ந்தான், திருநெய்ப்பேர், ராதாநல்லூர் உட்பட மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மன்னார் குடியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்படும் பகுதிகளாக 212 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதி மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக 249 முகாம் கள் அமைக்கப்பட்டுள்ளன. மக் களுக்கு உணவு வழங்கவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ள 8 துணை ஆட்சியர் நிலையில் வட்டத்துக்கு ஒருவர் வீதம் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது ஆட்சியர் வே.சாந்தா உடனிருந்தார்.
தஞ்சை மாவட்டத்தில்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் கடற்கரையில் மீனவர்கள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பணிகளை ஆட்சியர் ம.கோவிந்த ராவ் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 195 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு, அங்குள்ள பொதுமக்களை தங்கவைக்கப்பதற்காக 251 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. புயல் பாதிப்புகள் குறித்த தகவலை 1077 என்ற எண் மூலம், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணிநேரமும் மக்கள் தெரிவிக்கலாம்.
மீனவர்களின் படகுகள் பாது காப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ளவாறு மீனவர் கள் 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். வெள்ள நீர் வடிவதற்காக முதற்கட்டமாக அக்னியாறு முகத்துவாரங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. அனைத்து உள்ளாட்சிகளிலும் தேவையான அளவு ஜென ரேட்டர்கள், பொக்லைன், லாரிகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன என்றார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில்...
மயிலாடுதுறை மாவட்டம் கொள் ளிடம் அடுத்த நாதன்படுகை, அளக்குடி, ஆச்சாள்புரம், வெள்ளை மணல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலர் லலிதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறியது: நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 66 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment