Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM
ஊதிய உயர்வுடன் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு தினமும் கவன ஈர்ப்பு மனு அனுப்பி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத் தில் பகுதிநேர ஆசிரியர்கள் மனு அளித்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2011-2012 கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்டனர். உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி (கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி) ஆகிய கல்வி இணைச் செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு நடத்தி வருகின்றனர்.
ஊதிய உயர்வாக 3-வது கல்வியாண்டில் ரூ. 2 ஆயிரம், 6-வது கல்வியாண்டில் ரூ.700 வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஊதியம் உயர்த்தப்படவில்லை. இந்த ரூ.7,700 தொகுப்பூதியத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகிறோம்.
அரசின் உத்தரவை ஏற்று வேலைநிறுத்த காலங் களில் பள்ளிகளை திறந்து நடத்து கிறோம். கடந்த காலங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றியபகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் முழுநேர வேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் பல முன்னுதாரணங்கள் உள்ளன.
எனவே பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட முழுநேர வேலையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
ரூ.7,700 தொகுப்பூதியத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT