Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM
உதகையில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதால், பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 996 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் உதகையிலுள்ள ஏடிசி சுதந்திர திடல் பகுதியில் நடைபெற்ற வேல் யாத்திரை பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில துணைத் தலைவர்நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, " இதுவரை எத்தனையோ யாத்திரைகள் நடந்துள்ளன. இந்த யாத்திரை மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் கருணாநிதியும், அதிமுகவில் ஜெயலலிதாவும் இல்லாத இந்த காலகட்டத்தில் பல்வேறு தரப்பினரின் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் பாஜக பக்கம் வருமா என்று தீர்மானிக்கும் தேர்தலாக இது இருக்கும்.
திராவிட கொள்கை வேறு,பாஜக கொள்கை ஆன்மிக சித்தாந்தமுடையது. இதனால் பலர் பாஜகவில் இணைகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி தொடரும். கேட்கும் சீட்களை அவர்கள் கொடுப்பார்கள் என நம்புகிறோம். இருதரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்த பின்னர் பாஜகவுக்கான தொகுதிகள்ஒதுக்கப்படும்" என்றார். அனுமதியின்றி வேல் யாத்திரைசெல்ல முற்பட்ட 212 பெண்கள் உட்பட996 பாஜகவினர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.உதகையில் கைதுசெய்யப்பட்ட மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர். படம்: ஆர்.டி.சிவசங்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT