Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM
உலக மீன்வள தினத்தையொட்டி கடலூர் துறைமுகத்தை சுத்தப்ப டுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். கடலூர் துறைமுக மீன்பிடி இறங்குதளத்தில் நடை பெற்ற விழாவில், அசாதாரண சூழ்நிலையில் படகு மற்றும் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட தேவனாம்பட்டினம், சோனங்குப் பம், ரெட்டியார்பேட்டை, சின் னூர், முடசலோடை ஆகிய மீனவகிராமங்களைச் சேர்ந்த 5 மீனவர் களுக்கு சுழல் நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 888 நிவாரணத் தொகையை பய னாளிகள் வங்கிக் கணக்கில் பெறுவதற்கான ஆணையை வழங்கி னார். இதில் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தாவது:
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அளிப்பதில் மீன் வளம் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உலக மக்களின் புரதச்சத்து உணவின் தேவையில் 25 விழுக்காட்டினை மீன் உணவுஅளிக்கிறது. 8,118 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட இந்தியாவில் 1,076 கி.மீ. நீள முள்ள கடற்கரை தமிழ்நாட்டில் உள்ளது. 3.83 லட்சம் ஹெக்டேர் உள்நாட்டு நீராதாரங்களும் 56,000 ஹெக்டேர் உவர்நீர் ஆதாரங்களும் தமிழ்நாட்டின் மீன்வளத்திற்கு வலு சேர்க்கும் ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்தியா மீன் உற்பத்தியில் 4-ம் இடத்தை வகிக்கிறது என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் (மீன்வளம்) வேல்முருகன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் பலராமன், மீனவ பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT