Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM
கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் தலைவர் பொ.காசியண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கூட்டமைப்பு செயலாளர் கி.வடிவேலு, துணைத்தலைவர் அ.ராமசாமி, ஆறுமுகம், இணைச் செயலாளர்கள் பா.மா.வெங்கடாசலபதி, பி.ஆர்.பழனி சாமி, வி.எம்.கிருஷ்ணமூர்த்தி, சி.எம்.துளசிமணி, பொருளாளர் ஆர்.ஈசுவரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
பெருந்துறை வட்டம் திருவாச்சி கிராமத்திலிருந்து, கீழ்பவானி பிரதான வாய்க்கால் 56-வது மைலை கடந்து, கசிவு நீர் தவறான முறையில் கொண்டு செல்லப்படுகிறது. கீழ்பவானி பாசன திட்ட அமைப்பின் ஒழுங்கு முறை விதிகளை பொருட்படுத்தாமல், கசிவுநீர் எடுக்கப்படுவதால், 2400 ஏக்கர் நில பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீர் எடுப்பதை ரத்து செய்யக்கோரி, பாசன அமைப்பு சார்பில் இன்று (23-ம் தேதி) ஈரோட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில், நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயை 56-வது மைலில் கசிவுநீர் கொண்டு செல்ல அலுவலகத்திற்கு முன்மொழிவும் அனுமதியும் கோரப்படவில்லை எனத் தெரிவித் துள்ளார். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத எந்த திட்டத்திற்கும் பொதுப் பணித்துறை அனுமதி வழங்காது எனத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
கீழ்பவானி பாசன திட்டத்தில் மதகு பகுதிகளில், கீழ்பகுதி நிலங்களுக்கு, மேல் பகுதி விவசாயிகள் கொப்பு வாய்க்கால் நீரை தடுப்பது போன்ற செயல்களை தடுக்க, வயல் வரப்பு சட்டத்தை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT