Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM
நாகை மாவட்டம் திருக்குவளையில் "விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" என்ற தலைப்பில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப் பட்டார்.
இதனை கண்டித்து விழுப்புரம் காந்தி சிலை அருகில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் மறியல் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி எம்பி கவுதமசிகாமணி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் எம்பி லட்சுமணன், முன்னாள் நகர் மன்றத்தலைவர் ஜனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக 200 பேரை போலீஸார் கைது செய்து விழுப்பு ரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் எம்எல்ஏமஸ்தான் தலைமையில் எம்எல்ஏ மாசிலாமணி, முன்னாள் எம்எல் ஏக்கள் செந்தமிழ் செல்வன், சேதுநாதன் மற்றும் செஞ்சி சிவா உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
அரசூரில் திமுக ஒன்றிய பொறுப் பாளர் சந்திரசேகர் தலைமையிலும் மறியல் நடைபெற்றது.
விழுப்புரத்தில் கைது செய்ய ப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்ட திமுகவினரை பார்க்க வந்த மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி கூறியது:
அமைச்சர்கள் செல்லும்போது எவ்வளவோ கூட்டம் கூடுகிறது.அப்போது எதுவும் செய்யவில்லை. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வகையில் இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார். மாநில அரசு, திமுகவின் பரப்புரைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.ஆனால்ஜனநாயகத்தின் குரலை நெறிக் காமல் இருந்தால் போதும் என்று கூறினார்.
விருத்தாசலம் பாலக்கரையில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வெ.கணேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களை விருத் தாசலம் போலீஸார் கைது செய்து விடுவித்தனர்.
இதேபோன்று கள்ளக்குறிச்சி யில் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் நான்குமுனை சந்திப்பில் நடை பெற்ற மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த கள்ளக்குறிச்சி போலீஸார் பின்னர் விடுவித்தனர்.
திமுகவின் பரப்புரைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.ஆனால்ஜனநாயகத்தின் குரலை நெறிக்காமல் இருந்தால் போதும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT