Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
கரோனா பரவல் காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.1000 உதவித்தொகை கிடைக்காத மாற்றுத் திறனாளிகள் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பரவல் பொது முடக்கம் காரணமாக பொருளா தார நிலையில் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசால் சிறப்பு உதவி தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் 39 ஆயிரத்து 637 மாற்றுத் திறனாளிகளில், இதுவரை கரோனா நிவாரணத் தொகை தொகையை 22 ஆயிரத்து 213 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.
உதவித் தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள் 17,424 பேர் உள்ளனர்.
உதவி தொகையைப் பெறாதவர்கள், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியாதவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் வாங்க இயலாதவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.
மேலும், நேரில் வர முடியாதவர்கள் 75983 47889 என்ற செல்போன் எண்ணிலும், 84385 67019 வாட்ஸ்அப் எண்ணிலும், dlsakrishnagiri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் அனுப்பி பயன்பெறலாம். இதேபோல், ஓசூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, போச்சம் பள்ளி ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT