Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
தஞ்சாவூர்/ திருவாரூர்/ திருச்சி
நவ.26-ம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி தஞ்சாவூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், வருமான வரி கட்டாத அனைத்து மக்களுக்கும் மாதம் ரூ.7,500 ரொக்கம் மற்றும் கோதுமை 10 கிலோ வழங்க வேண்டும். வேளாண் சட்டங்கள், புதிய மின்சார சட்ட திருத்தம், சுற்றுச்சூழல் வரைவு திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.26-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கங் கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் எ.ரவிச்சந்திரன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜன், தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், காளிமுத்து, ஏஐடி யுசி மாவட்ட நிர்வாகிகள் வெ.சேவையா, துரை.மதிவாணன், தி.கோவிந்தராஜன், பி.செல்வம், ஆர்.பி.முத்துக்குமரன் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் அன்பு, பேர்நீதி ஆழ்வார், த.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் தொமுச குருநாதன், ஏஐடியுசி குணசேகரன், ஐஎன்டியுசி அம்பிகாபதி, மாவட்டச் செயலாளர்கள் ஏஐடியுசி சந்திரசேகர் ஆசாத், சிஐடியு முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல, மன்னார்குடி, கோட்டூர், திருத் துறைப்பூண்டி, கொரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான் உட்பட மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் பிரச்சாரம்
இதேபோல திருச்சி ரயில்வே ஜங்ஷன் காதி கிராப்ட் அருகே அகில இந்திய பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்க பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்துக்கு, கணேசன், ஷெரிப் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செல்வி, மணிகண்டன், மாறன், செல்வராஜ், ராஜேந்திரன், ராஜ் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, அந்தப் பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடம் பொது வேலைநிறுத்த கோரிக் கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப் பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment