Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா குறித்து ஆட்சியர் ஆய்வு பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அண்ணாமலையார் கோயிலில் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ள பிரம்ம தீர்த்த குளத்தை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடை பெறுகிறது. கரோனா பரவலால், மாட வீதியில் நடைபெற்று வந்த பஞ்சமூர்த்திகளின் உற்சவம் மற்றும் மகா தேரோட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத னால், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோயிலில் நேற்று கொடியேற்றம் நடை பெற்றதும், பஞ்சமூர்த்திகளின் உற்சவம் தொடங்கியது.

இந்நிலையில், அண்ணா மலையார் கோயிலில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும் போது, "ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்ட பக்தர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை மற்றும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்படுவதை ஆய்வு செய்தார். பின்னர் அவர், பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி செல்லும் வரை முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்" என்றார்.

இதையடுத்து, 29-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டதும், 3 நாட் களுக்கு (30-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை) தெப்பல் உற்சவம் நடைபெறவுள்ள பிரம்ம தீர்த்த குளத்தை பார்வையிட்டார்.

அப்போது, அந்த இடத்தில் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல் துறையினர் மற்றும் கோயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, மூலவர் சன்னதி முன்பு ஏற்றப் படும் பரணி தீபம் மற்றும் தங்கக் கொடி மரம் முன்பு நடைபெறும் அர்த்தநாரீஸ்வர் எழுந் தருளதல் ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டவர்கள் உட னிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x