Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் தேசிய மத நல்லிணக்க பிரச்சார வாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மத நல்லிணக்க பிரச்சார வாரம் இன்று (நவ.19) முதல் வரும் 25-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது. இந்தப் பிரச்சார வாரம், பொது மக்களிடையே மத நல்லிணக்கத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் போற்றும் வகையில் கடைபிடிக்கப்பட உள்ளது.

இந்தப் பிரச்சாரத்தின்போது, பொதுமக்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் வகையில் தேசிய மத நல்லிணக்க கொடி நாள் நிதியை வழங்கலாம். இதற்கு வருமான வரிச்சட்டத்தின்படி 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x