Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM
உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகரச் செயலாளர் சி.ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல, கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கும்பகோணம் நகரப் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில்...
திருச்சி புறநகர் மாவட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் கூத்தைப்பார் பேரூராட்சி அலுவலகம், திருவெறும்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சோழமாதேவி ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு சங்கத்தின் திருவெறும்பூர் ஒன்றிய துணைச் செயலாளர் தனராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் நாகராஜ், துணைச் செயலாளர் ஆராவமுதன், பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்டத் தலைவர் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி ஆகியோர் பேசினர். ஒன்றிய துணைத் தலைவர் வெங்கட சுப்பிரமணி நன்றி கூறினார்.
புதுக்கோட்டையில்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT