Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், கம்பியாளர், பிட்டர், ரெப்ரிஜிரேட்டர் அண்ட் ஏர்கண்டிசனர், வெல்டர், பேஷன் டிசைன் அண்ட் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நவ.20-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது நீடாமங்கலம், கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களையோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT