Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

மரக்காணத்தில் 3-வது நாளாக கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

விழுப்புரம்

மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலில் மாறுபட்ட நீரோட்டம், காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. கடல் அலைகளின் சீற்றம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.

மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வலைகள் மற்றும்மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். சுமார் 3 ஆயிரம் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இத்தொழிலை நம்பியுள்ள 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நேற்று காலை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்), விழுப்புரம் 15, வானூர் 52, திண்டிவனம் 35, மரக்காணம் 124, செஞ்சி 61,திருவெண்ணைநல்லூர் 10, மொத்த மழை அளவு 652, சராசரி மழை அளவு31.05.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x