Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாத புரம் ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் தேதியை முன்னிட்டு, ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்குவர். நேற்று கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்களுக்கு குருவடியார் மோகன் மாலை அணிவித்தார். இதற்காக கோயில் சன்னதி நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு கணபதி ஹோமம்,அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இருமுடி செலுத்த ஏற்பாடு
இதுகுறித்து வல்லபை ஐயப் பன் ஆலயத் தலைமை குருக்கள் மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் ஆலயம் போல அமைந்துள்ள ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் நேற்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதத்தைத் தொடங்கினர். கரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் வர வேண்டாம் என்றும், நாள் ஒன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.எனவே மேற்கண்ட நிபந் தனைகளின்படி சபரிமலை யாத்திரை செல்ல முடியாத பக்தர் களுக்காக ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் பக்தர்கள் சபரிமலையில் செலுத்துவது போல் இருமுடி செலுத்த ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. அர சின் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரி வித்தார்.
வத்தலகுண்டு
வத்தலகுண்டு கலியுக வரத ஐயப்பன் கோயிலில் சபரிமலை செல்லும் பக்தர்கள் நேற்று விரதத்தை தொடங்கினர். முன்ன தாக கோயிலில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT