மாமுண்டி அக்ரஹாரம் ஏரியில் மீன் பிடிக்கும் உரிமம் வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர் சங்க உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
மாமுண்டி அக்ரஹாரம் ஏரியில் மீன் பிடிக்கும் உரிமம் வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர் சங்க உறுப்பினர்கள் மனு அளித்தனர்.

ஏரியில் மீன் பிடிக்கும் உரிமையை உள்ளூர் மீனவர்களுக்கு வழங்க வேண்டும் நாமக்கல் ஆட்சியரிடம் வலியுறுத்தல்

Published on

மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, மல்லசமுத்திரம் பெரிய ஏரி ஆகிய ஏரிகளில் உள்ளூர் மீனவர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மீன் பிடிக்கும் உரிமை வழங்க வேண்டும், என மாமுண்டி அக்ரஹாரம் மக்கள் மற்றும் மீனவர் சங்க உறுப்பினர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

பள்ளிபாளையம், ஆவாரங் காடு எஃப்எம்ஆர் 13 மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மொத்தம் 9 ஏரிகள் உள்ளன. இதில், தேவனாம்பாளையம் ஏரி, பருத்திப்பள்ளி ஏரி மற்றும் இலுப்புளி, பாலமேடு, ஏமப்பள்ளி, மாமுண்டி அக்ரஹாரம் உள்பட 8 ஏரிகள் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் வருகிறது.

இவற்றில் மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, மல்லசமுத்திரம் பெரிய ஏரி ஆகிய இரு ஏரிகளிலும், ஏரியின் அருகில் உள்ள உள்ளூர் மீனவர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மீன் பிடிக்கும் உரிமை வழங்க வேண்டும், என மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

எனினும், குறிப்பிட்ட சில நபர்களுக்கே உரிமம் வழங்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்களுக்கு உரிமை வழங்குவதில்லை.

இதுதொடர்பாக திருச்செங் கோடு கோட்டாட்சியர் தலைமை யில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை.

எனவே பள்ளிபாளையம், ஆவாரங்காடு மீனவர் கூட்டுறவு சங்கத்தை பிரித்து மல்லசமுத்திரம் மீனவர் கூட்டுறவு சங்கம் தனியாக ஏற்படுத்த வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in