Published : 17 Nov 2020 03:14 AM
Last Updated : 17 Nov 2020 03:14 AM

ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்

திருநெல்வேலி/ நாகர்கோவில்

ஆண்டுதோறும் கார்த்திகை முதல்நாளில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைஐயப்பனை தரிசிக்க துளசிமணிமாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

இவ்வாண்டு கரோனா காரணமாக சபரிமலை வரும்பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை நடை நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி கார்த்திகை முதல் நாளான நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர். திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், சந்திப்பு சாலை குமரன் கோயில், நெல்லையப்பர் கோயில், வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோயில், பேராச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்தனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர்.

நாகர்கோவில்

சபரிமலை செல்லும் பக்தர்கள் ஏராளானோர் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நேற்று அதிகாலையில் நீராடினர். பின்னர், பகவதியம்மன் கோயில் வளாகத்தில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பார்வதிபுரம் ஐயப்பன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வேளிமலை முருகன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் என மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு மாலை அணிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x