Regional02
சாலை விபத்தில் வண்ணம் பூசும் தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறியைச் சேர்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி சஞ்சய் பிரசாந்த்(20). அதேஊரைச் சேர்ந்த தொழில்முறை நண்பர் அனித்குமார்(20). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அவதானப்பட்டி பகுதியில் சென்றபோது அவ்வழியே சென்ற கன்டெய்னர் லாரி அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், சஞ்சய் பிரசாந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றஅனித்குமார் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து பற்றி கிருஷ்ணகிரி அணை காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.
