Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை தீபாவளி வியாபாரம் பாதிப்பு

திருச்சி

தீபாவளி பண்டிகைக்கு முந் தைய நாளான நேற்று திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், இறுதிக்கட்ட வியாபாரம் பாதிக்கப்பட்டு, தரைக்கடை வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

தீபாவளி பண்டிகையை யொட்டி, திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, மேலரண் சாலை, என்எஸ்பி சாலை, சத்திரம் பேருந்து நிலையம், சூப்பர் பஜார், கோட்டை ரயில் நிலையச் சாலை, தில்லைநகர் என பல்வேறு கடை வீதிகளில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி நேரம் மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. இந்த மழையால் தரைக்கடைகள் உட்பட அனைத்து கடை களிலும் கடைசி நேர விற் பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதேபோல அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வி.களத்தூர், திருவாளந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும், புதுக்கோட்டையிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், காந்திஜி சாலை மற்றும் கும்பகோணம், பட்டுக் கோட்டை பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்ததால், சாலையோரங்களில் அமைக் கப்பட்டிருந்த பல் வேறு தரைக் கடைகளிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்தது. தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில், மழை பெய்ததால் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது.

கரூர் நகரில் நேற்று அவ்வப்போது லேசான மழை பெய்தபோதும், மழையில் நனைந்தவாறே பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x