Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று 510 கனஅடியாக உயர்ந் தது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 395 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 510 கனஅடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரமான 52அடியில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பாசனக் கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x