Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே நெடுகல் கம்பை ஆதிவாசி கிராமத்தில், கடந்த 2016-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி பெண் உட்பட ஏழு பேர், கிராம மக்களிடம் தங்கள்இயக்கத்தில் சேரும்படி நோட்டீஸ் ஒட்டிசென்றனர். இந்த வழக்கில் ஏற்கெனவே கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த டானிஸ் (27) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய கர்நாடகா மாநிலம், சிமோகா பகுதியை சேர்ந்த பெண் நக்சல் மதி (எ) ஷோபா (33) கடந்த மார்ச் 11-ம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ஷோபாவை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கரோனா தொற்று பரவலால் வழக்கு விசாரணை தள்ளிப்போனது. இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மதி (எ) ஷோபாவை அப்பர் குன்னூர் ஆய்வாளர்சாந்தி தலைமையிலான போலீஸார், மாவட்டநீதிபதி பி.வடமலை முன்பு நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை, வழக்கு விசாரணையை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஷோபா தரப்பில் வழக்கறிஞர் விஜயன், அரசு தரப்பில் பாலநந்தகுமார் ஆஜராகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT