Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM
விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் சார்பில் பில்லூர் கிராமத் தில், பெண்களுக்கான வன்கொடுமைமற்றும் பாலியல் தடுப்பு விழிப்பு ணர்வு ஊர்வலம் ஆய்வாளர் விநாயகமுருகன் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆய்வாளர்கள் பிரகாஷ் மற்றும் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏர்வாய்பட்டிணம் கிராமத்தில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலை யம் சார்பில் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது. சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதற் குண்டான தண்டனை, பாலியல் சம்பந்தப்பட்ட புகாரை எப்படி கொடுக்கலாம், யார் கொடுக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. குழந்தைகளை பாதுகாப் பாக எப்படி வளர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
இதே போல் ரிஷிவந்தியம் காவல்நிலைய முதல்நிலை பெண் காவலர் ரெஜினாமேரி, வெங்கலம் கிராமத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, கரோனா தொற்றுகுறித்தும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT