உயர் மின் கோபுரத் திட்ட விவகாரம் கேரளாவை போல தமிழகத்திலும் புதைவடத்தில் செயல்படுத்த வலியுறுத்தல்

உயர் மின் கோபுரத் திட்ட விவகாரம் கேரளாவை போல தமிழகத்திலும் புதைவடத்தில் செயல்படுத்த வலியுறுத்தல்

Published on

உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள்கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வழக்கறிஞர் ஈசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "உயர் மின் கோபுரத் திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு இல்லை எனவும், நிச்சயமாக உயர் மின் கோபுரம் மட்டும் அமைக்க வேண்டும் என்றும், நாட்டின் நலன் கருதி விவசாயிகள் நிலங்களை கொடுத்து தியாகம் செய்ய வேண்டும்என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலன் கருதி இன்றுவரை விவசாயிகள் மட்டுமே தியாகம் செய்து வருகின்றனர். விவசாயிகளின் நிலங்களுக்குள் உயர் மின் கோபுரம் அமைத்தால், நிலங்கள் சேதமாகி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்த மின்சாரத்தை எடுத்துச்செல்லும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

ஆனால் விவசாயிகளுக்கு ஆறுதல் தொகையான மாத வாடகை, நிரந்தர இழப்பீட்டுத் தொகையைகூட வழங்க மறுக் கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், உயர் மின் கோபுர பிரச்சினை நிச்சயம் பெரிதாக எதிரொலிக்கும்.

அரசாணைப்படி இழப்பீடு

உடனடியாக உயர் மின் கோபுர வழித்தடத்தை தவிர்த்து, அதைவிட பாதுகாப்பான விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் நிலத்துக்கு அடியில் புதைவடம் (கேபிள்) வழியாக எடுத்துச் சென்று, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முதல்வர் காக்க வேண்டும். உயர் மின் கோபுரங்களுக்கு பதிலாக அண்டை மாநிலமான கேரளாவில் 40 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலையோர மாக புதை வடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்பதைமுதல்வருக்கு தெரியப் படுத்துகிறோம்.

மதுரையில் இருந்து இலங்கை..

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in