Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM

தாட்கோ மூலம் பயிற்சி அளிக்க 7 பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி

திருவள்ளூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு தாட்கோ மூலமாக குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

இப்பயிற்சிகளை அளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 7 பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிஎன்சி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆடைகள் தைத்தல், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பயிற்சிகள் கேப்பிட்டல் சிஎன்சி பயிற்சி நிறுவனம் (மொபைல் எண்-9841282624), ஓவியாஸ் ஸ்கூல் ஆஃப் டிசைன் மற்றும் பைன் ஆர்ட்ஸ் (98409 31831), அன்னை சரோஜா அறக்கட்டளை (97500 55618), ட்ரீம் இந்தியா மகளிர் அறக்கட்டளை (9445533189), கன்னியப்பா நினைவு கல்வி அறக்கட்டளை (9790516238), விஸ்வம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி (9443707843) ஆகிய பயிற்சி நிறுவனங்களில் அளிக்கப்படும். எனவே, பயிற்சியை பெற விரும்புபவர்கள் இப்பயிற்சி மையங்களை அணுகி பயிற்சியில் சேரலாம்.

பயிற்சி முடித்தவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கவும் ஆவன செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x