Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM
விழுப்புரத்தில் பழங்குடி இருளர்பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் பிரபா கல்விமணி என்கிற பேராசிரியர் கல்யாணி நேற்று செய்தியாளர்களிடம் கூறி யது,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டுக் கழகம் என்ற அறக்கட்டளை 1994 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தவும் ஏழை, எளிய பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் 01.08.2000 ம் தேதி முதல் திண்டிவனம், ரோஷணையில். தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி’ தொடங் கப்பட்டு, தற்போது நடுநிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது.
சுயநிதிப் பள்ளியாக இயங்கி வரும் இப்பள்ளியில் இலவசமாகக் கல்வி வழங்கி வருகிறோம்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மூலம் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத் துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.
சந்திரலேகா என்ற மாணவி இப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை இலவசமாகப் படித்து, திண்டிவனம் முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படித்து 2020 மார்ச் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு நடத்திய நீட்தேர்வு பயிற்சியில் கலந்து கொண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற இவர் மாவட்ட அளவில் 10-வது இடத்திலும், மாநில அளவில் 271-வது இடத்திலும் உள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர் பாக அரசு வெளியிட்ட ஆணையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 6-வது வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் பயின்றிருக்க வேண்டும் அல்லது குழந்தைகளின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8 ம் வகுப்புவரை சுயநிதிப் பள்லியில் பயின்றிருக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது.
மாணவி சந்திரலேகா 1-ம் வகுப் பிலிருந்து 8 ம் வகுப்பு வரை பயின்ற தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி ஒரு சுயநிதி பள்ளிதான். இங்கு அனைவருக்கும் குழந்தை களின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு இணங்க இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. எனவேஇம்மாணவிக்கு சிறப்பு நிகழ்வாகக் கருதி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில உதவும்படி தமிழகமுதல்வர் மற்றும் மாண்புமிகு சட்ட அமைச்சரை கேட்டுக்கொள்கி றோம். இது குறித்த மனுவை நாளை(9ம் தேதி) ஆட்சியரிடம் அளிக்க உள்ளோம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT