Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

உளுந்தூர்பேட்டையில் பாலியல் குற்றம் குறித்த விழிப்புணர்வு

உளுந்தூர்பேட்டையில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பாலியல் குற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மா.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் ஆலோசனையின் பேரில் உளுந்தூர் பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் மேற் பார்வையில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மா மற்றும் காவலர்கள் இணைந்து பாலியல் குற்றம் குறித்துவிழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண் டனர். வயல்வெளியில் விவசாய வேலைசெய்யும் பெண்கள், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும்பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண் டனர். அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்குண்டான தண்டனைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இதுதொடர்பாக புகார்அளிக்கும் முறை குறித்தும் எடுத்துரைத்தனர். பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது எவ்வாறு என்பது குறித்து அறிவுரை வழங்கினர். எப்போதும் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண் டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கரோனா தொற்று நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை. நாம் தான் விழிப்புடன் இருக்க வேண் டும் என்று அறிவுரை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x