Published : 07 Nov 2020 03:15 AM
Last Updated : 07 Nov 2020 03:15 AM
வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் சார்பில் திருச்சியில் இன்று (நவ.7) கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த அனைத்து தகவல்களையும் அளிக்கும் நோக்கத்துடன், சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் சார்பில் திருச்சியில் கரூர் புறவழிச்சாலையில் சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள விவிட்– பொட்டிக் ஹோட்டலில்(VIVID - A BOUTIQUE HOTEL) இன்று(நவ.7) மாலை 5 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து, மருத்துவர்களாக உருவாக்கி வரும் லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனர் முகமது கனி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார்.
அங்கேயே பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பப் படிவங்களை பெற்று, எம்.பி.பி.எஸ். படிக்க தங்களுக்குரிய இடத்தை உறுதி செய்து கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9445783333/ 9952922333 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT