Published : 07 Nov 2020 03:15 AM
Last Updated : 07 Nov 2020 03:15 AM
வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்கப்பாதை பணிகள் தொடங் குவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன.
வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்டிஓ அலுவலக சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதற்கு, தீர்வாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்த சுரங்கப்பாதை திட்டத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதும் 7 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, தேசிய நெடுஞ் சாலையில் இரண்டு கட்டங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. முதற் கட்டமாக தேசிய நெடுஞ்சாலையின் சென்னை வழித்தடத்திலும், இரண்டாம் கட்டமாக பெங்களூரு வழித்தடத்திலும் பணிகள் தொடங்க உள்ளன. சர்வீஸ் சாலை பகுதியில் மேற்கொள்ள வேண்டிய இணைப்புப் பாதை இறுதியாக நடைபெற உள்ளது. சுரங்கப்பாதை 5 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT